டிரேடு மார்க் பதிவு செய்து பாதுகாப்பதால் என்ன பயன் ?

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்?
October 16, 2018
அறிவுசார் சொத்துரிமைகள் என்னென்ன ?
October 17, 2018

தொழிலை நடத்துவோருக்கு டிரேட் மார்க் பெறுவது மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு டிரேட் மார்க் அவசியமானதாக கருதப்படுகிறது.

பொருளோ,சேவையோ மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும் போது அதற்கான முழு உரிமையும் அதன் நிறுவனத்தை சார்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த டிரேட் மார்க். வார்த்தை, லோகோ, லேபிள் என எதுவாக வேண்டுமானாலும் இந்த டிரேட் மார்க் இருக்கலாம்.  உற்பத்தி பொருள், சேவை இவற்றின் பெயர் மற்றும் குறிகளுக்கு பெறுவது டிரேட் மார்க். டிரேட் மார்க் பெறுவதால் நிறுவனருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். டிரேட் மார்க் பெற்றவரின் பெயரில் வேறு யாராவது தொழில் தொடங்கி னாலோ அல்லது போலியாக பொருளை தயாரித்தாலோ உரிமைமீறல் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம். மேலும் அந்த நிறுவனத்தின் மீது தடை உத்தரவும் வாங்கலாம். சட்ட வழக்குகளை கையாள டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.

  • உங்கள் பிராண்ட்-ன் தனி உரிமையை பெறலாம், அதை நிலைநாட்டலாம்.
  • வணிக பெயரை (அ) முத்திரையை உங்கள் பொருள் / சேவைகளில் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.
  • வணிக பெயரை (அ) முத்திரையை விளம்பரப்படுத்தலாம், பிரபலப்படுத்தலாம், அதை முதலீடாக்கலாம்.
  • வணிக போலிகளை தடுக்கலாம், அதன் மீது சட்ட  நடவடிக்கை எடுக்கலாம்.
  • உங்கள் நிறுவனம், பொருள் (அ) சேவைக்கு கிடைக்கும் கெளரவத்தை உணரலாம்.
  • வாடிக்கையாளர்கள், காப்புரிமை பெற்ற நிறுவனத்தையே பெரிதும் நம்புகின்றனர்.
  • பலகாலம் உழைத்து வளர்த்த பிராண்டை, பிறரிடம் இழக்காமல் தன்னுடைமை ஆக்கலாம்.
  • நிறுவனத்திற்கும், அடுத்தடுத்த தலைமுறைக்கும் மதிப்புமிக்க சொத்தாக உங்கள் பிராண்டை மாற்றலாம்.
  • தலைமுறை தாண்டியும், பிராண்டின் மூலம் ஆண்டாண்டு காலம் உங்கள் பெயர் சொல்ல வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *