சாம்சங்கின் வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்

டூயல் சிம் வசதி கொண்ட 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம்
September 16, 2018
உள்நாட்டு பழங்கள்
September 17, 2018

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏ.கே.ஜி. ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்போன்கள் பேலன்ஸ் செய்யப்பட்ட ஸ்டூடியோ தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஏ.கே.ஜி. N700NC மாடல் இசை விரும்பிகளுக்கு ஏற்றதாக ஸ்டூடியோ தர ஆடியோ வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

 

அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் N700NC ஹெட்போன் கொண்டு பயனர்கள் வெளிப்புற சத்தம் எந்தளவு தங்களுக்கு கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

 

இதனுடன் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஆம்பியன்ட் அவேர்னஸ் போன்றவற்றை சம அளவில் இயக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏ.கே.ஜி. Y500 மாடலில் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு ப்ளூடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்துக் கொள்ள வழி செய்கிறது.

 

ஹெட்போன்கள் எடுக்கப்பட்டதும், அவை தானாக ஆடியோவை நிறுத்தி விடும் (pause), பின் மீண்டும் காதில் வைத்ததும் ஆடியோ தானாக இயங்க ஆரம்பிக்கும்.

 

ஏ.கே.ஜி. வயர்லெஸ் Y100 இயர்போன் குறைந்த எடையில் அதிக உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை க்ளிக் மூலம் ஆம்பியன்ட் அவேர் அம்சத்தை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

 

Y500 மற்றும் Y100 வயர்லெஸ் ஹெட்போன்கள் விலை அமெரிக்காவில் முறையே 149.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.10,810 என்றும் 99.95 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

N700NC விலை 349.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.25,320 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஹெட்போன்களும் அமெரிக்காவில் ஏ.கே.ஜி. அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் சாம்சங் வலைத்தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *