கிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி – சக்சஸ் ஸ்டோரி

ஆன்லைனில் கொடிகட்டி பறக்கும் அலிபாபா ஜாக் மாவின் தோல்வியும் , வெற்றியும் !
November 14, 2018

ஐ.நா சபையில் நீங்கள் உரையாற்ற வேண்டும். உடனடியாகப் புறப்பட்டு வாருங்கள் எனப் பொதுச் செயலாளர் கோபி அண்ணனிடம் இருந்து 2006 ஆம் ஆண்டுத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

 

ஆச்சரியத்தில் அவரையே அவரால் நம்ப முடியாத தருணம். ஏனென்றால் அவர் அரசியல்வாதியில்லை. அறிவியலாளரோ, கலைஞரோ இல்லை. ஒரு சாதாரண அலுவலக எழுத்தர். அதாவது கிளர்க்.

 

ஆந்திர மாநிலத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். சுட்டுப் போட்டாலும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியாத அவர், உயிர் காக்கும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆரோ பின்டோவின் உரிமையாளர்.

 

அமெரிக்காவின் 2 வது பெரிய மருந்து உற்பத்தியாளராக வளர்ந்த அவரின் பெயர் ராம்பிரசாத் ரெட்டி.

 

அமெரிக்க மருந்து உற்பத்தி சந்தையில் ஆரோபிண்டோ, உள்நாட்டு நிறுவனமான லுபினை பின்னுக்குத் தள்ளியது. உலக அளவில் பிரசித்தி பெற்ற மைலானை முந்தியது.

 

உயிர் காக்கும மருந்து உற்பத்தி நிறுவனமான இஸ்ரேலின் டேவாவை நெருங்கியது. இப்போது அமெரிக்காவின் இரண்டாவது மருந்து உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.

 

ராம்பிரசாத் ரெட்டியின் வாழ்க்கை

 

ஆந்திர மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ராம் பிரசாத் ரெட்டி. இளம் வயதில் ஒரு டிபார்ட்மெண்ட ஸ்டாரில் எழுத்தராகத் தனது பணியைத் தொடங்கினார். இதனையடுத்து ஒரு கெமிக்கல் டிரேடர்ஸின் உரிமையாளராக மாறினார்.

 

பின்னர் 1986 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்ற தனது இரண்டு நண்பர்களுடன் ஆரோபிண்டோ பார்மாவை தொடங்கினார். உறவினர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

 

வர்த்தக உபாயம்

 

சிப்லாவின் யூசுப் ஹமீது, விஞ்ஞானி அஞ்சி ரெட்டி போலப் பிரபுத்துவமான மனிதர் இல்லை என்று தெரிவித்த ராம்பிரசாத் ரெட்டியின் பங்குதாரர், அவருடைய வர்த்தக உபாயம் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.

 

மற்றவர்களைப் போலக் காற்றில் பறந்த தூசு போல உயரவில்லை என்றும், தனது வார்த்தையின் வலிமை மற்றும் நேர்மையான விலைக் கட்டுப்பாடுகளால் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

கைவசப்படுத்திய துணிச்சல்

 

2016 ஆம் ஆண்டுப் பிரிட்டனில் உள்ள டேவாஸ் நிறுவனத்தின் அக்டாவிஸை கையகப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஆரோபிண்டோ, இண்டாஸ் நிறுவனத்தை 5000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. கனடாவின் அபோடெக்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தை வசப்படுத்தியது.

 

தோல்விக்குப் பின் முயற்சி

 

சீனாவில் ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கருவிகள் அனைத்தும் தருவிக்கப்பட்டுக் கடைசியில் நிறுவனம் மூடப்பட்டதாகப் பங்குதாரர் நித்தியானந்த ரெட்டி கூறினார்.

 

அதே நேரம் 6, 7 ஆண்டுகளாக உலக அளவில் வர்த்தகத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

 

வளர்ச்சி உயரம்

 

டியூலோக்ஸ்டைன் உள்ளிட்ட ஆரோ பின்டோவின் பிரத்யேக தயாரிப்புகள் ஆண்டின் 180 நாட்களும் அமோகமாக விற்பனையாகின்றன. அமெரிக்கா சந்தையில் எந்தத் தாமதமும் இன்றி மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

 

விமானம் மூலம் தினசரி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்காவில் 1156 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யும் ஆரோ பின்டோ, 2021 இல் 1233 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *