நீங்கள் இல்லாமலே ஒரு தொழில் வர்த்தகத்தை உருவாக்குவது எப்படி?

பாரம்பரியம் மாறாத மதுரை பாண்டியன் அப்பளம்
October 29, 2018
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் நிறுவனத்தை கட்டமைத்த ப்ரமோத்!
November 14, 2018

சுய வேலைவாய்ப்பு என்பது எப்படி வர்த்தக உரிமையாளராக இருப்பதில் இருந்து வேறுபட்டது என்பதை உணர்வது அவசியம்.

 

ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், எலன் மஸ்க் போன்றவர்களை, வெற்றியைத்தவிர, சுயதொழில் செய்யும் உங்கள் நண்பர்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டுவது எது??

 

இவர்கள் அனைவரும் வர்த்தக உரிமையாளர்களாக இருந்தாலும், முதலில் குறிப்பிட்ட தங்கள் துறையின் தலைவர்களாக விளங்குபவர்கள்.

 

தொழில்முனைவோர் எனும் பட்டத்திற்கு உரியவர்களாக உள்ள நிலையில், உங்கள் நண்பர்கள் சுய தொழில் செய்பவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர்.

 

வர்த்தக உலகில் இந்த இரண்டு பதங்களும் வேறு வேறானவை. எனினும், பிரிலான்சர்கள் மற்றும் சின்ன சின்ன வேலை செய்பவர்கள் தங்களை தொழில்முனைவோர் என அழைத்துக்கொள்வது ஏன்? இது ஈகோவை நிறைவேற்றிக்கொள்ளவா அல்லது இதனால் ஏதேனும் பாதிப்பு இருக்குமா?

 

ஆங்கிலத்தில் அதிகம் தவறாக பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தைகளாக தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு ஆகியவை இருக்கிறது.

 

எத்தனை சங்கடம் தருவதாக இருந்தாலும், இருண்டுக்குமான வேறுபாட்டை நிறுவியாக வேண்டும். இல்லை எனில், நீங்கள் உட்பட பலரும், தங்கள் சூழலை உணராமல், தொழில்முறையாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது.

சுய வேலைவாய்ப்பு என்பது, பலநேரங்களில் ஒரு வலையாக அமைந்துவிடுகிறது. நேரம், பணம் மற்றும் திறன் ஆகியவற்றை இழுத்துக்கொள்ளும் வலையாக இருக்கலாம்.

 

சரியான அமைப்பில்லாத இது, முயற்சி மற்றும் பலனில் சீரான தன்மை இல்லாமலும் இருக்கலாம்.

 

இது போன்ற சூழலில், மிகவும் பழக்கமான ஆனால் சங்கடம் தரும் நிலை என்னவெனில், ஒரு தொழில்முனைவோராக இரு உலகின் மோசமான அம்சங்களையும் அனுபவிப்பதாகும்.

 

அதாவது, வர்த்தக உரிமையாளருக்கான நெருக்கடியை அனுபவிப்பதோடு, ஆனால், அதற்கான பலனை சம்பளம் பெறும் ஊழியர் போல லாபம் போன்ற எதையும் பெறாமல் இருப்பது.

 

சரியான திசை அல்லது விரிவாக்கத்திற்கான வாய்ப்பு இல்லாமல் எப்போதும் சுயதொழில் நிலையிலேயே இருப்பது என்பது சபிக்கப்பட்ட நிலையாகும். ஆனால் இதில் இருந்து வெளியேறும் வழிகள் இருக்கின்றன.

 

இந்த வழிகளை பார்ப்பதற்கு முன், வர்த்தக உரிமையாளராக இருப்பதில் இருந்து சுய தொழில் செய்வது எப்படி வேறுபடுகிறது என்பதை புரிந்து கொள்வது நல்லது.

 

செயல்பாடு

 

எந்த வர்த்தகமாக இருந்தாலும், மார்க்கெட்டிங், விற்பனை, செயல்பாடு, ஆய்வு, கணக்கு, மனித வளம் மற்றும் நிர்வாக ஆகிய ஏழு அம்சங்களை கொண்டிருக்கிறது.

 

சுயதொழிலில், இந்த செயல்கள் சீரற்று இருப்பதையும், இந்த துறைகளில் வரத்தக்கத்தில் சரியான திசைக்காட்டல் இல்லாதததையும், தொழில்முனைவோர் எப்போதும் தீயை அனைக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.

 

வர்த்தக சூழலில், தொழில்முனைவோர் இந்த செயல்களை மேற்கொள்ள அமைப்பு மற்றும் குழுக்களை உருவாக்கி இருப்பார். இவை வர்த்தகம் முன்னேற வழிவகுக்கும்.

 

ஆனால், இந்த செயல்களை எல்லாம் நீங்கள் ஒருவரே செய்ய வேண்டிய நிலை இருந்தால் நீங்கள் சுயதொழில் செய்வதாக பொருள்.

 

வர்த்தக உரிமையாளர்

 

சுய தொழில் சூழலில், மார்க்கெட்டிங் திட்டமிடல், விற்பனை, வாடிக்கையாளர் சேவை, கணக்கு வழக்கு மற்றும் புதிய திறமையை ஈர்ப்பது என எல்லா செயல்பாடுகளும் வர்த்தக உரிமையாளரை நேரடியாக சார்ந்திருக்கும்.

இதன் விளைவாக, நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் உரிமையாளர் நேரடியாக கவனம் செலுத்தியாக வேண்டும். வர்த்தக சூழலில், தினசரி செயல்பாடுகளை கவனித்துக்கொள்ள பொருத்தமான நபர்களை உரிமையாளர் ஏற்கனவே நியமித்துள்ளதால்,

 

அவர்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான உத்தி, வர்த்தக விர்வாக்கம் மற்றும் லாபம் அதிகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம். உத்திகள் வகுப்பதற்கான நேரம் இல்லாமல், தினசரி செயல்பாடுகளில் தொழில் செய்பவர் என்று பொருள்.

 

இலக்குகள்

 

சுயவேலைவாய்ப்பு சூழலில், வர்த்தக செலவுகளை, குறிப்பாக சம்பளத்தை குறித்த நேரத்தில் வழங்குவதோடு, போதுமான தனிப்பட்ட வருமானத்தை ஈட்டுவது தான் தொழில்முனைவோரின் இறுதி இலக்காக இருக்கிறது.

 

இந்த அம்சத்தில் இது நல்ல சம்பளம் அலுக்கும் வேலையில் இருந்து வேறுபட்டது அல்ல. ஆனால் வர்த்தகத்தில், பங்குதாரர்களுக்கு பெரிய அளவில் மதிப்பை உண்டாக்கி, வாடிக்கையாளர்களுக்கு பலனை ஏற்படுத்தித் தருவதே முக்கிய நோக்கம்.

 

சீரான, வளர்ச்சி சாத்தியம் கொண்ட, எல்லையில்லாத வளம் உருவாக்கும் அமைப்புகளை உருவாக்க வர்த்தகம் வாய்ப்பளிக்கிறது.

 

அடுத்த வேளை உணவுக்கான வழி பற்றிய சிந்தனை தவிர எதிர்காலத்திற்கான திட்டமிடல் இல்லாமல், தேவை அடிப்படையில் சிறிய திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தால் நீங்கள் சுய வேலைவாய்ப்பு கொண்டவர்.

 

இப்போது உங்கள் நிலையை தீர்மானித்துவிட்டதால், (நீங்கள் சுய வேலைவாய்ப்பு கொண்டவர்) உங்களை வளர விடாமல் தடுக்கும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.

 

சுயவேலைவாய்ப்பில் என்ன அடிப்படை பிரச்சனை என்றால் அதற்கு நீண்ட கால இலக்கு அல்லது திசைகாட்டல் இல்லை என்பது தான்.

 

இதற்கு உதவக்கூடிய மூன்று எளிய வழிகள்:

 

நீடித்த வர்த்தக மாதிரி

நீடித்த தன்மை மற்றும் வளர்ச்சி வாய்ப்பு ஆகியவை எந்த வர்த்தகமும் கொண்டிருக்க வேண்டிய முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பெரும்பாலான வர்த்தகங்கள் இவற்றை கொண்டிருப்பதில்லை.

 

நன்கறிந்தி பெயர்களாகிவிட்ட, சிறந்த வளர்ச்சி வாய்ப்பு கொண்டுள்ள ஆனால் வர்த்தகம் லாபகரமானதாக மாறும் புள்ளியை கடக்க முடியாத தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் பலவற்றை எனக்குத்தெரியும். இவை நீடித்த வளர்ச்சி கொண்டிருக்கவில்லை.

 

இது ஆபத்தானது. ஏனெனில், எந்த இறுதி இலக்கும் இல்லாமல், மதிப்பீட்டை அதிகரித்து நிதி திரட்டிக்கொள்ளலாம் எனும் கனவில் மிதக்க வைக்கும். இது எப்போது வேண்டுமானால் வெடித்துச்சிதறலாம்.

 

மறுபக்கத்தில் பாரம்பரிய வர்த்தக நிறுவங்கள் லாபகரமாக இருந்தாலும், விரிவாக்க ஆற்றல் அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கின்றன. அதாவது வளர்ச்சி வாய்ப்பு இல்லை.

 

லாபகரமாக இருக்கும் சூழலில் வளர அனுமதிப்பதே சிறந்த வர்த்தக மாதிரியாகும். நீண்ட கால நோக்கில் தோல்வி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.

 

அடுத்த தலைமுறை தலைவர்கள்

 

ஒரு தொழில்முனைவோர், தான் இல்லாத சூழலிலும் வர்த்தகத்தை நடத்தக்கூடிய திறன் வாய்ந்த நம்பிக்கை மிக்க குழுவை உருவாக்க வேண்டியது அவசியம்.

 

நீங்கள் நேரடியாக கவனிக்க தேவையில்லாத தினசரி செயல்பாடுகளில் மேலாளர்கள் ஈடுபட்டிருக்கும் சூழலில் நீங்கள் உத்தி வகுப்பதில் கவனம் செலுத்த இது வழி செய்யும்.

 

செயல்முறை அமைப்பு

 

அமைப்புகள் மற்றும் படிநிலைகள், செயல்திறன் மற்றும் பொறுப்பேற்பிற்கு வழி செய்கின்றன. எனவே சிறிய நிறுவனமாக இருந்தாலும் அதற்கான அமைப்பு தேவை.

 

கடினமான உண்மையை விளக்கியிருக்கிறேன். விளைவுகள் பற்றி சிந்தனை இல்லாமல் கனவுகளை துரத்திச்செல்ல அனுமதிக்கும் சமூகத்தில், வர்த்தக உரிமையாளராக அதற்கு பொருத்தமான முறையை சூழலை நீங்கள் அணுக வேண்டும்.

 

சுயவேலைவாய்ப்பு என்பது, அதை நோக்கி வருபவர்களை சிக்க வைக்கும் வலையாகும். அதிலிருந்து விடுபடுவதற்கான வழி, இதை கைவிட்டு வேலை தேடிக்கொள்வது தான். ஆனால் தொழில்முனைவு கொண்டவர்களுக்கு இது ஏற்றது இல்லை. இனி நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *