நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?

கரும்பு உற்பத்தியால் சர்க்கரை நோய் அதிகரிப்பு – உ.பி.முதல்வர் சர்ச்சை பேச்சு
September 14, 2018
ஃபிக்ஸட் டெபாசிட் OK, Corporate Fixed Deposit என்றால் என்ன ?
September 16, 2018

நாம் தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில் பல தொழில்கள் இருக்கும் .

 

அதை நாம் சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம்.

 

இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் இருக்கும் .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் .

 

1. தொழில்களை பட்டியலிடுங்கள் :–

 

நம் மனதில் புதுப் புது தொழில்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நம் மனதில் தோன்றிய தொழில்களை முதலில் பட்டியலிட (List )வேண்டும். தொழில்களை ஒரு தாளிலோ அல்லது கணினியிலோ வரிசையாக பட்டியலிடுங்கள் .

 

சந்தை ஆய்வு(Market Survey) அல்லது சந்தையில் உள்ள தேவையின்(Market Demand) அடிப்படையிலோ இந்த தொழில்ப்பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

 

2. தகுதி(Competence) மற்றும் சந்தையில் தேவைகளை (Market Demand) பொருத்திப் பாருங்கள் :

 

பல தொழில்களுக்கு சந்தையில் தேவை நிறைய இருக்கும் .நீங்கள் பட்டியலிட்ட தொழில்களில் அதிகபட்ச சந்தை தேவையுள்ள (Huge Market Demand) தொழில்களை தேர்ந்தெடுங்கள் .

 

அதில் உங்கள் தகுதி (Competence), ஆற்றல் (Ability) , திறமைகளை(Skills) பொருத்திப் பாருங்கள் . உங்கள் தகுதி மற்றும் திறமைகளுக்கு அதிகம் ஒத்துப் போகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள் .

 

3. பேரார்வம் மற்றும் உணர்ச்சிகளை சோதித்து பாருங்கள் (Check Passion and Emotions ):-

 

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்களுக்கு பேரார்வம் (Passion) உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள். தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் தீராத காதல்(Passion) இருக்குமா அல்லது மேலோட்டமான பார்வையால் தேர்ந்தெடுத்தீர்களா என்பதை சோதித்து பாருங்கள்.

 

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் உங்கள் உணர்ச்சிக்குட்பட்டு(Emotions) இருக்குமா என்பதை சோதித்து பாருங்கள் .

 

4. குறிக்கோள்(Objectives) மற்றும் நோக்கத்திற்கு(Purpose) இடமளியுங்கள் :

 

உங்கள் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு இடம் தருகிற தொழில்களை தேர்ந்தெடுங்கள்.

 

நம் சிலரின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவது ,சேவை ,வாழ்க்கை மற்றும் உடலுக்கு நலம் தரக்கூடிய ,சூற்றுச்சூழல் பாதுகாப்பு ,பாதிப்பில்லா சமூகம் போன்றவையாக இருக்கலாம் .

 

நாம் தேர்ந்தெடுக்கும் தொழில் நமது குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு இடமளிக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *