டிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் ?

யாஹூ மற்றும் ரெடிஃப் டிரேட்மார்க் கிடைக்காமல் போனதோ?
October 17, 2018
ஏமாறாமல் தங்கம் வாங்குவதற்கு சில டிப்ஸ்!!
October 19, 2018

பெரிய அளவில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கம்பெனிகளின் பெயரைக் கொஞ்சம் மாற்றி முன்போ, பின்போ ஏதேனும் வார்த்தை சேர்த்தாலும் அல்லது அதில் உள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டு பயன்படுத்தினாலும் டிரேட் மார்க் கிடைக்காது”

”பொருளின் தரத்தை, தன்மையைக் குறிக்கும் வகையிலான வார்த்தைகளைச் சேர்த்துப் பதிவு செய்யமுடியாது. உதாரணத்துக்கு ‘குவாலிட்டி, பெஸ்ட், ஹைஜீனிக், லாங்லைஃப்’ போன்ற வார்த்தைகள் பிராண்ட் பெயருடன் வரக்கூடாது. அதே போல மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளும் பிராண்டுடன் வரக்கூடாது.

என்ன பொருளை உற்பத்தி செய்கிறோமோ, அந்தப் பொருள் பிராண்ட் பெயருடன் வந்தால் டிரேட் மார்க் கிடைக்காது. உதாரணத்துக்கு ‘அஞ்சலி’ என்ற நிறுவனம் சோப் தயாரிக்கிறது என்றால் ‘அஞ்சலி சோப்’ என்று பெயர் வைக்கமுடியாது. ஏனென்றால் சோப் என்பது அனைவருக்கும் சமமான வார்த்தை. அதைச் சேர்க்கும்போது டிரேட் மார்க் கிடைக்காது.

டிரேட் மார்க் வாங்கும்போது பிராண்டின் பெயர், லோகோ, கேப்ஷன் ஆகியவற்றையும் சேர்த்தே பதிவு செய்யலாம். ஆனால், இவற்றைத் தனித்தனியாகப் பதிவு செய்வதே நல்லது. ஏனென்றால் மொத்தமாகப் பதிவு செய்யும்போது அதை மற்றவர்கள் மொத்தமாக அப்படியே பயன்படுத்தினால்தான் நாம் தடுக்கமுடியும். அதிலிருந்து சில வார்த்தைகளை மட்டும் மற்றவர்கள் பயன்படுத்தினால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடும். ஆனால், தனித்தனியாகப் பதிவு செய்யும்போது கொஞ்சம் கட்டணம் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *