ஆன்லைனில் கொடிகட்டி பறக்கும் அலிபாபா ஜாக் மாவின் தோல்வியும் , வெற்றியும் !

இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் நிறுவனத்தை கட்டமைத்த ப்ரமோத்!
November 14, 2018
கிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி – சக்சஸ் ஸ்டோரி
November 14, 2018

அலிபாபா நிறுவனார் ஜாக் மா 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி, சீனாவில் உள்ள ஹாங்ஸ்வு ப்ரோவின்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

 

பள்ளிப் பருவம் முதல் பட்டம் பெற்று வேளைக்குச் செல்லும் வரை அனைத்திலும் முதலில் தோல்வியையே சந்தித்துள்ளார் ஜாக் மா. குறிப்பாக இவர் வேலைக்காக விண்ணப்பித்த 30 வெவ்வேறு நிறுவனங்களிலும் இவரைத் தேர்வு செய்யவில்லை.

 

பல முயற்சிக்குப் பின்னர் சீனாவின் அரசு சம்மந்தப்பட்ட வேலையில் குறுகிய காலம் பணிபுரிந்தார் ஜாக் மா, அந்த வேலை மூலமாக கிடைத்த தொடர்புகளை வைத்து 18 நபர்களை தேர்வுசெய்து தனது வீட்டிலையே அலிபாபா எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி-இல் அவர் நிறுவனத்துக்கு நீதி மறுக்கப்பட்ட பொழுதும் அவரின் விடா முயற்சியால் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சாப்ட் பேங்க் மூலம் முதலீடு பெற்றார்.

 

இந்த முதலீட்டின் மூலம் சீனாவில் அலிபாபா நிறுவனத்தை வலுப்படுத்தினர் அதைத் தொடர்ந்து சர்வதேச அளவுக்கு விரிவடைந்தது ஜாக் மாவின் அலிபாபா.

 

2014 ஆண்டு உலகின் மிகப் பெரிய ஐபிஓ ஆனது அலிபாபா. நியூயார்க் பங்குச்சந்தை மூலம் 25 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *